மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு அறிவிப்பு!

தமிழக திறன் பயிற்சி துறை சார்பில் மின்கம்பியாள் உதவியாளர் (Wireman Helper Competency Examination) திறனறி தேர்வு டிசம்பர் 13 மற்றும் 14, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தகுதி:

  • விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
  • அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

தகுதியானவர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து, 17.10.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.