திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று அதிகாலை முதலே அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கிவிட்டார்கள். பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்து, கிரிவலமும் மேற்கொண்டனர். சித்ரா பவுர்ணமி இன்று இரவு 10.48 மணி வரையில் உள்ளதால் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று வருகிறார்கள்.