பள்ளி திறப்புக்கான முக்கிய நெறிமுறைகள்!!

    • பள்ளிகள் திறக்கப்படும் அன்று முழுமையாக மாணவர்கள் பள்ளியை பயன்படுத்தும் வகையில் சுத்தப்படுத்தி தயார் செய்ய வேண்டும்.

 

    • பள்ளி வளாகத்தை முழுமையாக சுத்தப்படுத்திட வேண்டும்; வகுப்பறைகளை சுத்தம் செய்து கரும்பலகைக்கு மை பூசி தயார் செய்ய வேண்டும்.

 

    • மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும்.

 

    • 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து பேச்சு, கவிதை, துண்டு பிரசுரம், சுவரொட்டி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 

    • முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் சரியாகவும், தரமானதாகவும் தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

 

    • மதிய உணவு இடைவேளை முடிந்து 20 நிமிடங்கள் மாணவர்களுக்கு சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும்.

 

ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.