பிஎஸ்எம்எஸ், பிஎம்எஸ், பியுனானி, பிஎச்எம்எஸ் 2025–26 மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம் – ஆகஸ்ட் 8ம் தேதி கடைசி நாள்

சித்தா ஆயுர்வேத யுனானி ஒமியோபதி (பிஎஸ்எம்எஸ்), பிஎம்எஸ், பியுனானி, பிஎச்எம்எஸ் பட்டப்படிப்புகளுக்கு 2025–26 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய நகல்களுடன் ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம் – ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை -600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதை தவிர்த்து, விண்ணப்ப பதிவு செய்யும் கடைசி நாள் ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5 மணி வரை என்பதையும், சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.