திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், தக்ஷிணாயன புண்யகாலத்தை முன்னிட்டு ஆனி மாதப் பிரமோற்சவம் இன்று (07.07.2025) கொடியேற்ற விழாவுடன் துவங்கப்பட்டது. பிரமோற்சவத்தின் முதல் நாளான இன்று காலை 6.30 மணி முதல் 7.25 மணி வரை, தங்கக் கொடிமரத்தில் கொடியேற்ற விழா பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டதுடன், சிறப்பாக நடைபெற்றது.