திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – DAY 10!

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள மூன்றாம் பிராகாரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடி மரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.

மன்மத தகன நிகழ்ச்சிக்காக 20 அடி உயரம் கொண்ட மன்மத பொம்மை கையில் வில்லோடு அருணாச்சலேஸ்வரர் முன்பு நிறுத்தப்பட்டது. அப்போது மன்மதனை அருணாச்சலேஸ்வரர் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கும் நிகழ்வு நடந்தேறியது. அருணாச்சலேஸ்வரர் முன்பிருந்து சீரிப்பாய்ந்து வந்த தீ மன்மதன் மீது பட்டு கொழுந்து விட்டு எரிந்தது.

இதனைத் தொடர்ந்து தன் மீது அம்பு எய்த மன்மதனை அருணாச்சலேஸ்வரர் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த மன்மத தகன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.